×

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பீடி சுற்றும் இலைகள் கரை ஒதுங்கின

ராமேஸ்வரம், மே 13: தனுஷ்கோடி கடலோர பகுதியில் கரை ஒதுங்கிய பீடி இலைகள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் தனுஷ்கோடி கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி கடலில் பீடி இலைகள் மிதந்து வருவதாகவும், கரை ஒதுங்குவதாகவும் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மீனவர்களிடையே விசாரணை செய்தனர்.

தற்போது இலங்கைக்கு அதிகளவில் பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கெண்டு இலைகள் கடத்தப்படுகிறது. இதனால் கடத்தல் நபர்கள் படகில் கெண்டு இலைகளை கடத்தி செல்லும் போது கடற்படை கப்பலை பார்த்ததும் கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும், இவைகள் கடலில் மிதந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாரும், புலனாய்வு துறையினரும் தவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பீடி சுற்றும் இலைகள் கரை ஒதுங்கின appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameswaram ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு