×

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

மதுரை, மே 13: மதுரை வேளாண் துணை இயக்குநர் அமுதன் கூறியதாவது, உணவு- ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் பயறு வகைகளை பயிரிட விதை இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது உளுந்தில் கே.கே.எம்.1, எம்.டி.யு.1, வம்பன் 8 மற்றும் 10 ரகங்களில் 8000 கிலோ விதைகள் இருப்பில் உள்ளன.

பாசிப்பயறில் கோ 8, வம்பன் 4 ரகங்களில் 2489 கிலோ விதைகள், துவரைப்பயறு எல்.ஆர்.ஜி.52 ரகத்தில் 2601 கிலோ விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ளன. இவை 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டேரில் சாகுபடி செய்ய வழங்கப்படுகிறது. அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துகளும் மானிய விலையில் வழங்கப்படுவதால் விவசாயிகள் பயன்பெறலாம்.

The post விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Deputy Director of Agriculture ,Amuthan ,Food-Nutrition Security Movement ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!