சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்தாண்டு அம்பேத்கர் சுடர் விருது சிபிஐ (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) அகில இந்திய பொது செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: 2023ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கர் சுடர் விருது மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கும் வழங்கப்படுகிறது. விசிக விருதுகள் வழங்கும் விழா மே 28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் நடைபெறும். மணிப்பூர் கலவரத்திற்கு முழுக்க முழுக்க பாஜவின் வெறுப்பு அரசியல் தான் காரணம். பழங்குடி மக்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னையில் 15ம் தேதி காலை விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
2023ம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறுவோர் பட்டியல்
அம்பேத்கர் சுடர் திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர், சிபிஐ (எம்.எல்)
பெரியார் ஒளி டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்
காமராசர் கதிர் மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை
அயோத்திதாசர் ஆதவன் ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு
மார்க்ஸ் மாமணி கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
காயிதேமில்லத் பிறை மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகம்
செம்மொழி ஞாயிறு தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.
The post திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.