×

சேலம் தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

சேலம்: சேலத்தில் தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் எருமப்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் உஷா தம்பதி தங்களது இரண்டு மகன்களுடன் மல்லூர் அருகே உள்ள தனியார் தீம் பார்க்கிற்கு சென்றுள்ளனர்.

அப்போது தம்பதியினரின் மூத்த மகன் சௌடேஸ்வரன் தண்ணீரில் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பார்த்த விதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக சௌடேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்வ்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் சடலத்தை பாரத அவரின் தயார் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத்த காட்சி காண்போரை கலங்கவைத்தது.

பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தீம் பார்க் சென்ற குடும்பத்தினருக்கு மகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை காலம் என்பதால் பெற்றோர் பிள்ளைகளை இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி இருக்கின்றது.

 

The post சேலம் தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem… ,Dinakaran ,
× RELATED வாடகைக்கு பேசி ₹25 லட்சம் வாங்கிவிட்டு...