×

மின்சாரம் தாக்கி டெய்லர் பலி

திருப்பூர்,மே12: திருப்பூர், வீரபாண்டி, ஆத்தா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சபரீஷ் (18). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் துணியை இஸ்திரி செய்வதற்காக அயரன் பாக்ஸ்போட்டுள்ளார். அப்போது அந்த அயரன் பாக்ஸ் வயரில் லேசான விரிசல் இருந்துள்ளது. அதன் வழியாக சபரீஸ் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி டெய்லர் பலி appeared first on Dinakaran.

Tags : Taylor ,Tirupur ,Sabareesh ,Attha Garden, Veerapandi, Tirupur ,Banyan Company ,
× RELATED கன்னியாகுமரியில் பைக்கில் இருந்து விழுந்து டெய்லர் பலி