×

சனிதோறும் படியுங்கள்: கரூர் நகர போலீசார் அறிவுரை: போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்: கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

கரூர், மே 12: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்றிசி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான பணிக்காலியிடம் மற்றும் தேர்வுக்கு https:tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 1ம்தேதி முதல் 30ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று மே 12ம் தேதி துவங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் தங்களின் விபரத்தினை 04324&223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய விபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், thttps:tamilnadu careerservices.tn.gov.in என்ற இணையளத்தில் அனைத்து போட்டித் தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரித் தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய வசதியாக கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7மணி முதல் 9மணி வரையிலும், இதன் மறுஒளிபரப்பு பிற்பகல் 7மணி முதல் 9மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post சனிதோறும் படியுங்கள்: கரூர் நகர போலீசார் அறிவுரை: போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்: கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur City Police ,Karur District ,Karur ,Karur District Employment and Career Guidance Centre ,SATH ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு