×

100 வது மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத 36 நர்சிங் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற 1 வாரம் தடை: சண்டிகர் கல்லூரி நிர்வாக உத்தரவால் பரபரப்பு

சண்டிகர்: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்காத நர்சிங் கல்லூரி மாணவர்கள் விடுதியை விட்டு வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்‘ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒலிபரப்பானது. இந்த ‘மனதின் குரல்‘ சிறப்பு நேரலை ஔிபரப்பில் சண்டிகர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுநிலை மாணவர்கள் 36 பேர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முதுநிலை 3ம் ஆண்டு பயிலும் 28 மாணவர்கள், முதலாம் ஆண்டு பயிலும் 8 மாணவர்கள் ஒருவாரத்துக்கு விடுதியை விட்டு வௌியே செல்ல சண்டிகர் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது. அந்த மாணவர்கள் வௌியூர்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு பள்ளியில் ‘மனதின் குரல்‘ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

The post 100 வது மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத 36 நர்சிங் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற 1 வாரம் தடை: சண்டிகர் கல்லூரி நிர்வாக உத்தரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,PM Modi ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்