×

டெல்லியில் டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம் : ஐசிஎம்ஆர் புது முயற்சி!!

டெல்லி : ரத்தம் மற்றும் மருந்து பொருட்களை ஐடிரோன் திட்டம் மூலமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் போக்குவரத்து வசதி குறைவான மலைப் பகுதிகளில் டிரோன் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து டிரோன் மூலம் கொண்டு செல்லப்பட்ட மருந்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுகிறதா எனவும் வெப்பநிலை பராமரிப்பு குறித்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்தம் மற்றும் மருந்துப் பொருட்களை டிரோன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இருந்து 10 யூனிட் ரத்தம் டிரோன் மூலம் அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post டெல்லியில் டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம் : ஐசிஎம்ஆர் புது முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,ICMR ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...