×

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி தப்புமா?: 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!!

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்தும், ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்தும் உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்தார். இந்நிலையில், 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. மகாராஷ்டிர அரசியலில் எத்தகைய அதிரடி மாற்றம் நிகழப்போகிறது என்பது இன்று தெரியவரும். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி தப்புமா? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

The post மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி தப்புமா?: 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Chief Minister ,Eknath Shinde ,Supreme Court ,Mumbai ,Shiv Sena ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’