×

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களுக்கு அரசு கார்

தூத்துக்குடி, மே 11: தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனங்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், யூனியன் தலைவர்கள் பயன்பாட்டுக்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய வாகனங்கள் வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 வாகனங்கள் ஒதுக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாகனங்களை வழங்கினர்.மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, யூனியன் சேர்மன்கள் தூத்துக்குடி வசுமதி அம்பாசங்கர், கருங்குளம் கோமதி ராஜேந்திரன், ஓட்டப்பிடாரம் ரமேஷ் மற்றும் வைகுண்டம், புதூர் சேர்மன்களும் கார்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களுக்கு அரசு கார் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,District Panchayat ,Ministers ,Ketajivan ,Anita Radhakrishnan ,Thoothukudi District Panchayat ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்