×

ஆந்திர மாநிலத்தில் மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண புதிய இணையதளம்-முதல்வர் தொடங்கி வைத்தார்

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்வு காண புதிய இணையதளத்தை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தாடே பள்ளி முகாம் அலுவலகத்திலிருந்து பொதுமக்களின் குறைகளை உடனடி தீர்வு காண ஜெகன்ணனுக்கு செப்புதாம் புதிய இணையதளம் திட்டம் மற்றும் இலவச தொலைபேசி எண் 1902 வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடக்கி வைத்தார். இந்த வீடியோ கான்பரன்சில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும், ஜேசிக்கள் மற்றும் எஸ்பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: பாரபட்சமில்லாத, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, நேர்மையான நலத்திட்ட உதவிகளை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிட அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் மட்டத்தில் இருந்து கிராமச் செயலக ஊழியர் வரை அனைவரும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். கிராமப் பயணத்தின் ஒரு பகுதியாக, கிராம அளவிலான செயலகங்கள், அங்கன்வாடி மையங்கள், கிராம சுகாதார கிளினிக்குகள், பள்ளிகள் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுமக்களின் கோரிக்கைகளை திருப்திகரமான அளவில் தீர்க்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கட ரமணா, மாவட்ட எஸ்பி பரமேஸ்வர், இணை கலெக்டர் பாலாஜி மற்றும் மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காணிப்பு பிரிவுகள் அமைப்பு

இந்த திட்டம் 1902க்கு எனுக்கு அழைத்து புகார் பதிவு செய்தவுடன் ஒய்எஸ்ஆர் (உங்கள் சேவை குறிப்பு) ஐடி உடனடியாக வழங்கப்படும். புகார்களை முதல்வர் அலுவலகம் நேரடியாகக் கண்காணிக்கும். சிக்கலைக் கண்காணிக்கும் போது ஐவிஆர்எஸ் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் புகார் குறித்த நிலை தெரிவிக்கப்படும். பிரச்னைகளை தீர்க்க கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post ஆந்திர மாநிலத்தில் மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண புதிய இணையதளம்-முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : AP ,Thirupati ,Chief Minister ,Jehanmohan ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?