×

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (10.5.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான .பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

இக்குழுமக்கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, முனையத்தின் எதிரே புதிய புறநகர் இரயில் நிறுத்தம் மற்றும் இரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு நகரும் மேல்மட்ட நடைமேடை அமைப்பது சம்பந்தமாகவும், மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தினை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நிதியளிப்பது சம்பந்தமாகவும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசளித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்குழுமக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன் , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா , சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) .எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் .அன்சூல் மிஸ்ரா , நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு,வடநெரே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்த ராவ், , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா. கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. appeared first on Dinakaran.

Tags : 273rd Group ,Chennai Metropolitan Development Group ,Minister ,PK Shekharbabu ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Chennai Metropolitan ,273rd ,Group ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...