×

பெண்ணிடம் பணம் மோசடி

திருவாடானை, மே 10: திருவாடானை அருகே டி.கிளியூரை சேர்ந்தவர் கலாராணி(42). இவர் நேற்று திருவாடானை வடக்கு வீதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது பணம் எடுக்க உதவி செய்வது போல் நின்றவர்,கலாராணியிடம் ஏடிஎம் கார்டை வாங்கிய பின் பணம் வரவில்லை என கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.

சில நிமிடங்களில் கலாராணியின் கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுக்க உதவிய அந்த மர்ம நபர் கலா ராணியின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

The post பெண்ணிடம் பணம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Kalarani ,D.Clure ,Thiruvadan North Road ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...