×

850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 2 வாலிபர்கள் கைது

 

ஈரோடு, மே 10: ஈரோடு கருங்கல்பாளையம் கமலா வீதியில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்வதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, ரேஷன் அரிசி கொட்டகையில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்து, அங்கு மொபட்டில் ரேஷன் மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த கணேசன் மகன் சூர்யா (27), அதேபகுதி சின்னமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகசேன் மகன் பிரகாஷ் (26) என்பதும், இவர்கள் இருவரும் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சூர்யா, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மொபட்டினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Karungalpalayam Kamala road ,Dinakaran ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை