×

பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அந்த தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக 19ம் தேதி துணைத் தேர்வு நடக்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 1 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 1 தேர்வுக்கான அட்டவணையையும் நேற்று வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் நடக்கும்.

The post பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா