×

பிரான்க்ஸ் என்ற மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது மாருதி சுசூகி..!!

மாருதி சுசூகி நிறுவனம், பிரான்க்ஸ் என்ற மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பலேனோவை அடிப்படையாக கொண்ட இந்த கிராஸ்ஓவர் , கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது. இந்த கார் சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஜெட்டா, அல்பா என 5 வேரியண்ட்களில் உள்ளது. துவக்க ஷோரூம் விலையாக, சிக்மா சுமார் ரூ.7.47 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான அல்பா டர்போ வேரியண்ட் ஷோ விலை சுமார் ரூ.13.14 லட்சம்.

துவக்க வேரியண்ட் விலையானது, பலேனோ காரை விட சுமார் ரூ.11,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 2017ம் ஆண்டு பலேனோ ஆர்எஸ் -ல் இடம் பெற்றிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும் 147 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், 5ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், கிராண்ட் விட்டாரா எஸ்யுவியில் உள்ளது போன்ற ஸ்பிளிட் ஹெட்லாம்ப் இதில் இடம்பெற்றுள்ளது.

The post பிரான்க்ஸ் என்ற மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது மாருதி சுசூகி..!! appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Franks ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...