×

ம.பி.யில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 15 பேர் பரிதாப பலி.. 25 பேர் படுகாயம்.. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை மத்தியப்பிரதேசத்தின் கார்கோ மாவட்டத்தில் இருந்து 70 பயணிகளை ஏற்றி கொண்டு இந்தூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டோங்கர்கான் பகுதியில் கார்கோனில் ஆற்றுப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அருகில் உள்ள மருத்துவமனையில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்தியப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ம.பி.யில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 15 பேர் பரிதாப பலி.. 25 பேர் படுகாயம்.. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி..!! appeared first on Dinakaran.

Tags : Mb. ,Bopal ,Madhea Pradesh ,Kargo district ,
× RELATED 96 எம்பி தொகுதிகள் மற்றும் 2...