×

சில்லி பாயின்ட்…

* மாட்ரிட் ஓபன் தொடர் முடிவடைந்த நிலையில், உலக தரவரிசையில் சாம்பியன் அல்கரஸ் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். பைனலில் அவரிடம் போராடி தோற்ற லெனார்டு 608 புள்ளிகள் பெற்று 65வது இடத்தில் இருந்து ஒரேயடியாக 37 இடங்கள் முன்னேறி 28வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப் 30ல் முதல் முறையாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜோகோவிச் (6775), அல்கரஸ் (6770) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் இன்று தொடங்குகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஹாட்ரிக் சாம்பியனாகும் முனைப்புடன் களம் காண்கிறார். மாட்ரிட் ஓபனில் ஸ்வியாடெக்கை வீழ்த்திய அரினா சபலென்கா (பெலாரஸ்), முன்னாள் சாம்பியன்கள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோருடன் ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), மரியா சாக்கரி (கிரீஸ்) ஆகியோரும் பட்டம் வெல்ல வரிந்துகட்டுகின்றனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Madrid Open ,Alcazar ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!