×

மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

 

ராசிபுரம், மே 8: ராசிபுரம் காவல்துறை சார்பில், ‘சிறுவர் மனமகிழ் மன்றம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தோல் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தோல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராசிபுரம் எஸ்ஐ தங்கம் தலைமையில், எஸ்எஸ்ஐ பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

The post மாணவர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Rashipuram ,Rashipuram Police ,Camp for ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...