தோகைமலை, மே 8: கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் நடந்த சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சிகளில் திரலான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலையில் பெரியநாயகி சமேத விரையாச்சிலை ஈஸ்வரர் கோயிலில் அனைத்து சாமி சிலைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கு விபூதி, சந்தனம், நெய், தேன், பழவகைகள், மஞ்சல், குங்குமம், திருமஞ்சனம், பால், புனிதநீர் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு சாத்துபடி செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரலான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு பெரியநாயகி சமேத விரையாச்சிலை ஈஸ்வரர் சுவாமிகளை தரிசனம் பெற்றனர்.தொடர்ந்து முத்துப்பல்லக்கில் பெரியநாயகி அம்மனும், அன்னவாகனம், குதிரை வாகனம், மயில் வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் விராச்சிலை ஈஸ்வரர் பரிவார சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் வீதி உலா வந்தது.
அப்போது வீதி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
The post கடவூர் சிவன் கோயில்களில் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
