×

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு

மதுரை, மே 8: மதுரை விளாங்குடி மெயின் ரோட்டில் கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பரவை பவர்ஹவுஸ் எதிரே உள்ள ஆர்.ஜே.டி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது மனைவி சுந்தரி(60)யுடன் டூவீலரில் மதுரை வந்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். புது விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து டூவீலரில் வந்த 2 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில், சுந்தரியின் கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேத்தில் தப்பினர்.

இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில், கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, வழிப்பறி நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோயில் அருகில், கடந்த சில தினங்களுக்கு முன், இதேபோல் கணவருடன் டூவீலரில் சென்ற, கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரேகா(37) என்பவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை, டூவீலரில் சென்ற இரு மர்ம நபர்கள் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

The post கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Vlangudi main Road ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...