×

லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை சித்திரைத் திருவிழாவாகும். அதன் முக்கிய நிகழ்வாக, சித்ரா பௌர்ணமி தினத்தன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்து கள்ளழகரை வழிபடுவார்கள்.

அதிமுக ஆட்சியிலும், தொடர்ந்து அதிமுக அரசிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் காரணமாக, சிறு அசம்பாவிதம்கூட ஏற்படா வண்ணம் பக்தர்கள் சிறப்பாக வழிபட்டுச் சென்றனர். கடந்த 2022ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன்.

ஆனால், 5.5.2023 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடாத காரணத்தினாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் இறந்ததாகவும், மற்றொரு இளைஞர் கோயில் மண்டப வாசலின் அருகே கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவங்கள் நடந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இனியாவது, இதுபோன்ற லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,general secretary ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...