×

திருவெண்ணெய்நல்லூர் அருகே உலக மக்கள் நலம்பெற வேண்டி பால்குட ஊர்வலம்

திருவெண்ணெய்நல்லூர், மே 7: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.கொளத்தூர் கிராமத்தில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோயிலில் டி.கொளத்தூர், பூசாரிபாளையம், கொண்டசமுத்திரம், ஒட்டநந்தல், புதுப்பாளையம், ஆமூர், பெரியசெவலை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உலக மக்கள் நலம் பெற வேண்டியும், பூமிக்கு மழை வேண்டியும் அம்மனுக்கு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வயல்வெளியில் உள்ள எல்லைபிடாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே உலக மக்கள் நலம்பெற வேண்டி பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Balkuta procession ,Thiruvenneynallur ,D. Kolathur village ,Pitariyamman temple ,D. Kolathur ,Pusaripaliyam ,Kondasamutram ,Ottanandal ,
× RELATED குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த நாகப் பாம்பு