×

கடன் தொல்லையால் விரக்தி தொழிலதிபர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

வேளச்சேரி: மேடவாக்கம், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் சிஏ படித்துவிட்டு, ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சிந்துஜா (29). இருவரும் காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே கடந்த சில வருடங்களாக கோபி பலரிடம் கடன் வாங்கி அரிசி மண்டி, பைக் ஷோரூம், எண்ணெய் கடை, ஏலச்சீட்டு உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக கோபிக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி தரும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, தனது மனைவி சிந்துஜாவை கோவிலம்பாக்கத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் வீட்டுக்கு கோபி அழைத்து சென்று விட்டுவிட்டு, கடந்த 13ம் தேதி ஆந்திரா வரை சென்று வருவதாக கூறிவிட்டு, கோபி மாயமாகி உள்ளார். இந்நிலையில், கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் அவரது மனைவி சிந்துஜாவிடம் பணத்தை திருப்பி தரும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதில் மனமுடைந்த சிந்துஜா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் விரக்தி தொழிலதிபர் மனைவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Medavakkam, Kadakupatte ,CA ,Sindhuja ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மாணவர்கள் தூய்மை பணி