×

புத்தரின் தத்துவங்கள் அனைவர் வாழ்வில் வெளிச்சம், சக்தியை ஏற்படுத்த வேண்டுகிறேன் : பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!!

டெல்லி : கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இவ்வாண்டு புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களிலும் புத்த பூர்ணிமா அழைக்கப்படுகிறது. புத்த பூர்ணிமா திருநாள் இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். புத்தரின் தத்துவங்கள் அனைவர் வாழ்வில் வெளிச்சம், சக்தியை ஏற்படுத்த வேண்டுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “#புத்தபூர்ணிமா புனித நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். புத்தபெருமானின் அமைதி, இரக்கம் மற்றும் தன்னலமற்ற தன்மை பற்றிய தெய்வீக போதனைகள் மனிதகுலத்தை அமைதியான மற்றும் வளமான உலகத்தை நோக்கி பாடுபட தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

The post புத்தரின் தத்துவங்கள் அனைவர் வாழ்வில் வெளிச்சம், சக்தியை ஏற்படுத்த வேண்டுகிறேன் : பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Governor R. N.N. ,Delhi ,Buddhism ,Gautama Buddha ,Purnima ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...