கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற காரில் எரிபொருள் கசிந்து தீப்பிடித்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பாதையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சிராஜுதீன் என்பவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும் போது மலை அடிவாரமான காமக்காபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது காரில் எஞ்சினில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அனைவரும் காரிலிருந்து இறங்கிய நிலையில் தீ மளமள வென கார் முழுவதும் பரவியது. இதில் காரில் இருந்த பெண் உட்பட 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
The post கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற காரில் எரிபொருள் கசிந்து விபத்து..!! appeared first on Dinakaran.
