×

திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி, மே 5: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் 2006 – ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா இந்தாண்டு வரும் ஜூன் 17 மற்றும் 18ம் தேதி (சனி , ஞாயிற்றுக்கிழமை) திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி முன்னோடி இயற்கை விவசாயிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தேசிய நெல் திருவிழா – 2023 ல் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள் இவ்வாண்டு 15 ஆயிரம் விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய விதை நெல் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பாரம்பரிய அரிசியில் தயார் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கும் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கும் ஐயா நெல் ஜெயராமன் , ஐயா நம்மாழ்வார் விருது வழங்கப்படும். முன்னோடி இயற்கை விவசாயிகளை கொண்டு கருத்தரங்கம் நடத்தப்படும். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில இயற்கை வேளாண் வல்லுனர்களை கொண்ட சிறப்பு கருத்துரை அமர்வுகள் இடம் பெற உள்ளது.

The post திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : National Paddy Festival ,Thirutharapoondi ,Thiruthuraipoondi ,
× RELATED குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்,...