×

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கரன் கச்சனோவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடெர்மிடோவா 6-4, 0-6, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

The post மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ் appeared first on Dinakaran.

Tags : Carlos Algarz ,Madrid Open International Tennis Semifinals ,Madrid ,Madrid Open ,Spain ,Madrid Open International Tennis Semi-Final ,Dinakaran ,
× RELATED கடல் கடந்து வெளிநாட்டில் வாழும்...