×

பொலிரோ மேக்ஸ் பிக்-அப்

மகிந்திரா நிறுவனம், புதிய பொலிரோ மேக்ஸ் பிக்-அப் ரேஞ்ச் வாகனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் மொத்தம் 12 வேரியண்ட்கள் உள்ளன. இவை எச்டி மற்றும் சிட்டி என 2 வகையாக உள்ளன. எச்டி என்பது கனரக வாகனம் என்பதையும், சிட்டி என்பது நகருக்குள் பயன்படுத்தத்தக்கது என்பதையும் குறிக்கிறது. புதிய பொலிரோ மேக்ஸ் பிக்-அப் ரேஞ்ச் எச்டி ரேஞ்ச் வரிசையில் 1.3, 1.7, 1.7 எல் மற்றும் 2.0 எல் என 4 வேரியண்ட்களை கொண்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் உள்ளது.

எச்டி 1.3 வேரியண்டின் அதிகபட்ச சுமை திறன் 1,250 கிலோ. டாப் வேரியண்ட் 2,000 கிலோ சுமை திறன் வரை கொண்டது. இதுபோல், சிட்டி வரிசையில் 1.3,1.4 மற்றும் 1.5 என 3 வேரியண்ட்கள் உள்ளன. இதன் சிட்டி 1.3-ன் சுமை திறன் 1,300 கிலோ. அடிப்படை வேரியண்டான மேக்ஸ் சிட்டி 1.3எல்எக்ஸ் சிபிசியின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.85 லட்சம். சிட்டி வேரியண்ட்டில் டாப் வேரியண்டான மேக்ஸ் சிட்டி சிஎன்ஜி சுமார் ரூ.8.25 லட்சம். இதுபோல் மேக்ஸ் எச்டி வரிசையில் அடிப்படை வேரியண்டான 1.7 எல்எக்ஸ் சிபிசி சுமார் ரூ.9.26 லட்சம். டாப் வேரியண்டான மேக்ஸ் எச்டி 2.0எல் எல்க்ஸ் சுமார் ரூ.10.33 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்எக்ஸ் மற்றும் விஎக்ஸ்ஐ என இரண்டு டிரிம்கள் உள்ளன. உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளத்தக்க சீட்டுகள், எல்இடி டெயில் லாம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வாகனத்தை டிராக் செய்யக்கூடிய வசதி கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு இன்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கின்றன. வாகனத்தின் சுமைதிறன், அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப இன்ஜின் திறன் வெளிப்பாட்டிலும் வேறுபடலாம்.

The post பொலிரோ மேக்ஸ் பிக்-அப் appeared first on Dinakaran.

Tags : Magindra ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...