×

ஜம்மு – காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து விபத்து!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு–காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து நொறுங்கியது. ராணுவ ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்துள்ளார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர், யூனியன் பிரதேச்ம கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

மலைப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எஞ்சிய 1 பயணியை தேடும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜம்மு – காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : Army ,Kishtuwar ,Jammu and Kashmir ,Dhruv ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் குல்காம்...