×

நீட், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தி பெரம்பலூர் கலெக்டர் வகுப்பு நடத்தி அசத்தல்

பெரம்பலூர்,மே.4: பெரம்ப லூரில் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆசிரிய ராக மாறி மாணவர்களுக்கு விலங்கியல் பாடத்தை உட லின் பாகங்களுடன் படம் வரைந்து விளக்கி வகுப்பு நடத்தியதால் மாணவர்கள் பயிற்சியாளர்கள் பரவசமடைந்தனர்.மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்ததும் மருத்துவத்திற்கான நீட் தே ர்வு உள்ளிட்ட பல்வேறு போ ட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அடி ப்படையில் சிறப்பு பயற்சி வகுப்புகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதிதொடங்கப்பட்டு இன் று,(4ஆம்தேதி) வரை நடை பெறுகிறது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயி ன்றுவருகின்றனர்.அவர்க ளை ஊக்கப்ப டுத்தும் வித மாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி யிலிருந்து ரூ1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர் விற்கான புத்தகங்கள், கல் வி உபகரணங்கள் மற்றும் காலை மற்றும் மாலைநேர சிற்றுண் டிகள்வழங்கப்பட் டு பயிற்சி வகுப்பு நடைபெ ற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் மா ணவர்கள் போட்டிதேர்வுக ளை எவ்வித அச்சமும், தய க்கமும், பதட்டமும் இல்லா மல் எழுதும் வகையில் ஒவ் வொரு பாடத்திலும் தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க ப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நடை பெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் இன்றுடன்(4ம் தேதி) முடிவடையும் தருவா யில் உள்ளது. இறுதியாக 2,3,4 ஆகிய தேதிகளில் கா லை மாதிரி தேர்வுகளும், மாலை நடைபெறும் வகுப் பில் காலை நடைபெற்ற தேர்வுக்கான பதில் மற்றும் அதுதொடர்பாக எழும் கேள் விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த ப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நேற்று விலங்கியல் தொடர்பாக மாலைநேர பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனைப் பார்க்கச் சென்ற மாவட்ட கலெக்டர் கற்பகம் எம்எஸ்சி, பிஎட் விலங்கியல் பட்டம் பெற்றுள்ளதால் திடீரென பயிற்சிக்கான சிறப்பு

ஆசிரியரை அமரவைத்துவிட்டு தானே விலங்கியல் பாடத்தை, மனித உடலமைப்பு பாகங்களுடன் படம் வரை ந்து செரிமானம் தொடர் பான தலைப்பில் விளக்கி பாடம் நடத்தினார்.
மேலும் மாணவர்களுக்கு விலங்கி யல் தொடர்பான சந்தேகங் களுக்கு சுலபமாக புரியும் வகையில் கலெக்டர் பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தனர். சம்பந்தப்பட்ட பயிற்சி ஆசிரியர் உள்ளிட்ட நீட் தேர் வுக்கான பயிற்சியாளர்கள் அனைவரும் ஆச்சர்யமுடன் பார்த்து பிரமித்தனர்.

The post நீட், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தி பெரம்பலூர் கலெக்டர் வகுப்பு நடத்தி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Asatal ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...