×

பனாமா எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு

துபாய்: பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் நேற்று பாரசீக வளைகுடா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பலை வழிமறித்த ஈரான் கடற்படை அதனை சிறைப்பிடித்தது.

ஒரே வாரத்தில் ஈரான் சிறைப்பிடிக்கும் இரண்டாவது எண்ணெய் கப்பல் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல் நியோவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கப்பலை சுற்றி ஈரான் கடற்படையினர் இருக்கும் புகைப்படங்களையும் அமெரிக்க கடற்படை வெளியிடப்பட்டுள்ளது. எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து ஈரான் உடனடியாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

The post பனாமா எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Panama ,Dubai ,Iran ,US Navy ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு