×

இனிமையான மனிதர்; எல்லோருக்கும் பிடித்தமான மனிதர்: மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த்; இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல்..!!

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்சனை காரணமாக மனோபாலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இயக்குனர் மனோபாலா உடல் நாளை காலை 10.30 மணிக்கு ஏ.வி.எம். மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மனோபாலா மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

நடிகர் ரஜினிகாந்த்: பிரபல இயக்குநரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலா இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. மனோபாலா குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்; அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா: என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என்னிடம் இருந்த எத்தனையோ உதவி இயக்குநர்களில் மனோபாலா சிறந்த ஓவியர் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

நடிகர் கருணாஸ்: மனோபாலா நல்ல குணம் உடையவர்; அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நடிகர் மதன்பாப்: அருமையான மனிதர்; அவரது மறைவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.

இயக்குநர் விக்ரமன்: உதவி இயக்குநர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய கூடியவர் மனோபலா.

தயாரிப்பாளர் டி.சிவா: இனிமையான மனிதர்; எல்லோருக்கும் பிடித்தமான மனிதர் மனோபாலா.

நடிகர் சரத்குமார்: தமிழ் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா: மனோபாலா இறந்ததை கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தேன் என்று வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார்.

நடிகர் சத்யராஜ்: நானும் மனோபாலாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தோம் அவரது மறைவு வேதனையளிக்கிறது. மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: இயக்குநர் மனோபாலா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவர், பழகுவதற்கு இனிமையானவர் மனோபாலா. மனோபாலா மறைவு அதிமுகவுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்: நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர் மனோபாலா. மனோபாலா மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், சக திரை கலைஞர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

வி.கே.சசிகலா: மனோபாலா மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

The post இனிமையான மனிதர்; எல்லோருக்கும் பிடித்தமான மனிதர்: மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த்; இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Manopala ,Bharatraja ,Chennai ,malaise ,Manophala ,Bharatiraja ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...