×

ஒட்டன்சத்திரத்திற்கும் வந்தாச்சு தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் 10 ரூபாய் செலுத்தினால் ஒரு பை கிடைக்கும்

 

ஒட்டன்சத்திரம், மே 3: தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை துவங்கி வைத்தார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தினால் ஒரு மஞ்சப்பை கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பையில், ‘மீண்டும் மஞ்சப்பை தமிழகத்தின் அடையாளம், நெகிழியை ஒழிப்போம் இயற்கை வளத்தை காப்போம், நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

The post ஒட்டன்சத்திரத்திற்கும் வந்தாச்சு தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் 10 ரூபாய் செலுத்தினால் ஒரு பை கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : Ottenchatra ,Ottenchatram ,Chief Minister ,M.K.Stalin ,Manjapai movement ,Tamil Nadu ,Otanchatra ,
× RELATED கோடை வெயிலால் காய்கறி விளைச்சல்...