திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளருக்கு மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து உடனடியாக திருப்பதி கோவில் போலீசார், தேவஸ்தான அதிகாரிகள், ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள் ஆகியோர் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தினர்.
ஏழுமலையான் கோவில் முன்பும் நான்கு மாட வீதி உள்ளிட்ட இடங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் பைகளில் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் கொண்டு இரவு முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில், மிரட்டல் வந்த மின்னஞ்சல் போலி ஆனது என்பது தெரியவந்தது. திருமலையில் பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் பக்தர்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
The post திருமலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் : ஆக்டோபஸ் கமாண்டோ, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!! appeared first on Dinakaran.
