×

சமூக நீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகர்; அதேபோல் மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: உங்களில் ஒருவன் கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது; அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. 2 ஆண்டு ஆட்சியில் மன நிறைவுடன் இருக்கிறேன். 5 ஆண்டு ஆட்சியில் 2 ஆண்டுகள் என்பது பாதிக்கூட இல்லை. ஆனால் இரண்டே ஆண்டுகளில் மக்களுக்கு தந்த வாக்குறுதியில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றம்.சொன்னதை மட்டுமல்ல சொல்லாத பல திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். மிக குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை தீட்டியது.

இந்தியாவில் இப்போது இருக்கிற திமுக அரசாகதான் இருக்க முடியும். 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்து இருக்கிறோம். இன்னும் சரி செய்யப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. 2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற முன்னோடி மக்கள் நல திட்டங்களை செய்து காட்டி உள்ளோம். நம்பர் ஒன் தமிழ்நாடு என்ற நமது இலக்கை நோக்கி செல்வோம்; இந்தியாவின் முழுமைக்குமானதுதான் தமிழ்நாட்டின் குரல். கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுகிறார்; இதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது.

சமூக நீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகர்; அதேபோல் மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர். சமூக வலைதளங்களில் கோயபல்ஸ் பொய்களை பா.ஜ.க. கட்டவிழ்த்துவிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தால் இந்துக்கள் மகிழ்வார்கள் என பாஜக நினைக்கிறது. தெலங்கானாவில் முஸ்லீம் ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்ற அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தார்.

The post சமூக நீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகர்; அதேபோல் மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,BCE ,G.K. Stalin ,Chennai ,MC. G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து