×

பாலியல் குற்றசாட்டை முன்வைத்து டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு திமுக ஆதவு

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா சந்தித்து திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

இந்தியாவுக்கே பெருமை தேடி தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சுயமரியாதையை காக்க போராடும் நிலைக்கு வீராங்கனைகள் தள்ளப்பட்டிருப்பாய் காண நெஞ்சம் பதைக்கிறது என முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post பாலியல் குற்றசாட்டை முன்வைத்து டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு திமுக ஆதவு appeared first on Dinakaran.

Tags : Djagagam ,Delhi ,Dishagam ,Jandar Mantar ,Dazhagam Aadu ,
× RELATED கல்வி, சுகாதாரம், மின்சார துறைகளில்...