×

ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா

 

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை அருட்திரு ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் 26ம் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் நிர்மலா ஜெயராஜ் தலைமை வகிக்க, ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சுந்தர்சிங் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக டோக் கல்லூரியின் முதல்வர் கிறிஸ்டியனாசிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து துறை சார்ந்த தனித்திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர் அணி சேர்மன் சௌபரணிகா நன்றி கூறினார்.

The post ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Ottenchatram Ambilikai ,Christian College ,Annual Celebration ,Othanchatram ,Amblikai Aruthiru Jacob Memorial Christian College ,Othanchatram Ambilikai ,Annual Ceremony ,Dinakaran ,
× RELATED தொழிலாளர் நல சங்க ஆண்டு விழா