×

இருமத்தூர் பகுதியில் மா விளைச்சல் அமோகம்

தர்மபுரி: இருமத்தூர் பகுதியில் மா விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் காய்ப்பை எட்டாத மரங்களை தவிர்த்து, சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரில் தற்போது மா அறுவடை நடக்க உள்ளது.

மாவட்டம் முழுக்க பெங்களூரா, நீலம், செந்தூரா, அல்போன்சா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு சில ரகங்களும் குறைந்த பரப்பில் நடப்பட்டுள்ளது. தர்மபுரி அருகே இருமத்தூர், கிருஷ்ணாபுரம், திப்பம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள மா, தற்போது காய்த்து பருவத்திற்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் அறுவடை தருணத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மா விளைச்சல் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post இருமத்தூர் பகுதியில் மா விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Bhimathur ,Darmapuri ,Twimathur ,Darmapuri District ,Bennagaram ,Palakkodu ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...