×

தா.பேட்டை அருகே லாரி மோதி சிறுவன் பரிதாப பலி

 

தா.பேட்டை: தா.பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது சிறுவன் லாரி மோதி பலியானான். தா.பேட்டை அருகே துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீவர்ஷன்(4). நேற்று உறவினருடன் வர்ஷன் பழம் வாங்குவதற்காக வெளியே சென்றனர். உறவினர் துலையாநத்தம் புது காலனி அருகில் பழம் வாங்கி கொண்டிருந்தபோது சிறுவன் ஸ்ரீவர்ஷன் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது அந்த வழியாக சென்ற கனரக லாரி மோதிய விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் ஸ்ரீவர்ஷன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவன் உடலை முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் ராஜீவ்காந்தி (35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தா.பேட்டை அருகே லாரி மோதி சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tha. Pettai ,Tha.Pettai ,Tha.Pettai. ,
× RELATED முசிறி, தொட்டியம், தா.பேட்டையில் வரத்து வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை