×

பேஸ்புக் நட்பின் மூலம் பாலியல் மோசடி; பெண்ணின் வலையில் சிக்கிய ‘சல்லாப’ ஆசிரியர்: பணம், செல்போன், கிரெடிட் கார்டை இழந்த பரிதாபம்

டேராடூன்: பேஸ்புக் நட்பால் இளம்பெண்ணின் வலையில் சிக்கிய சல்லாப ஆசிரியர், தனது பணம் செல்போன் போன்றவற்றை இழந்தார். இவ்வழக்கில் தம்பதி உட்பட 4 பேரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் அடுத்த காசிபூரில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர், ஐ.டி.ஐ காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சந்திக்க திட்டமிட்டோம். அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாட ஜஸ்பூர் குர்தில் அவரது ருத்ராக்ஷ் தோட்டத்திற்கு சென்றேன். அங்கு என்னை வரவேற்ற அந்த பெண், என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் என்னிடம் அவர் மிகவும் ெநருக்கமாக நடந்து கொண்டார்.

அதனை திரைமறைவில் இருந்து அவரது தோழர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். பின்னர், அந்த வீடியோ காட்சிகளை என்னிடம் காட்டி ரூ. 2 லட்சம் பணம் கேட்டனர். இல்லாவிட்டால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி விடுவதாக மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, இரண்டு தவணைகளாக ரூ.30 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். மேலும் என்னுடைய ஸ்கூட்டி, கிரெடிட் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்தப் பெண்ணும் அவரது தோழர்களும் பறித்துக் கொண்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தை விசாரித்த போலீசார், பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ெபண் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதுகுறித்து உதம் சிங் நகர் போலீஸ் எஸ்.எஸ்.பி மஞ்சுநாத் டி.சி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட ஆசிரியரை பாலியல் மோசடியில் சிக்கவைத்த தம்பதி உட்பட நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் ரொக்கம், செல்போன், கிரெடிட் கார்டு, ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

The post பேஸ்புக் நட்பின் மூலம் பாலியல் மோசடி; பெண்ணின் வலையில் சிக்கிய ‘சல்லாப’ ஆசிரியர்: பணம், செல்போன், கிரெடிட் கார்டை இழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Sallabah ,Sallaba ,Sallabha ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை