×

கொடைரோடு டோல்கேட்டில் அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

 

நிலக்கோட்டை: திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்கச்சாவடியில் தமிழ்நாடு அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கருப்பு கொடி ஏந்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேலவர் சுரேஷ் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சூசை மாணிக்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் வாகன சோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கும் ஆர்டிஓ அதிகாரிகளை முறைப்படுத்த வேண்டும்,

தனி நலவாரியம் அமைக்க வேண்டும், பைக் டாக்சி முறையை தடை செய்ய வேண்டும், வெளிமாநிலம் செல்லும் லாரி ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய மோட்டார் வாகன தடை சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஆத்தூர், வத்தலக்குண்டு பகுதிகளை சேர்ந்த ஓட்டுனர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.

The post கொடைரோடு டோல்கேட்டில் அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodyrod ,Tolgate ,Nalakkotta ,Dintugual-Madurai ,Way ,Kodairod Chunkachavadi Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு;...