×

திண்டுக்கல் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டையை அடுத்த அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (42). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் பிளவேந்திரன் (45). இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்.26ம் தேதி பிரான்சிஸ் வீட்டிற்கு வந்த பிளவேந்திரன், அங்கிருந்த பிரான்சிஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டோ மேரி (40) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பிளவேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிறிஸ்டோ மேரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த கிறிஸ்டோமேரியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் எஸ்ஐ பாலசுப்ரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Dindukal ,Francis ,Almancarayankotte ,Dintugul ,blavendran ,Thindugul ,Dinakaran ,
× RELATED கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,...