×

முசிறி மாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழா

 

முசிறி, ஏப்.29: திருச்சி மாவட்டம், முசிறியில் சித்திரை மாதம் முன்னிட்டு மாரியம்மன் கோயில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முசிறி  மேலத்தெரு மகா மாரியம்மன் கோயில் தேர் வீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரித்த திருத்தேரில் அமர்ந்து, நகரத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேரில் வலம் வந்த அம்மனுக்கு தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். இதேபோல் பாலத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் உலக மக்களின் நன்மைக்காக வழிபாடுகளும் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஊராட்சிகளின் முக்கிய சாலைகளில்
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

The post முசிறி மாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Muziri Mariamman Temples ,Sitra ,Musiri ,Mariamman ,Trichy District, ,Musri ,Muziri Mariamman Temples Shiritra Festival ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு