×

மது, குட்கா விற்ற 4பேர் கைது

ஊத்தங்கரை, ஏப்.29: ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசார் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற சம்பத் (33) என்பவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிங்காரப்பேட்டை போலீசார் குப்பநத்தம் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் மதுவிற்றுக் கொண்டிருந்த ஆறுமுகம்(37) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்ற ஜியா உல்லா(18) மற்றும் செங்கபட்டி பஸ் ஸ்டாப்பில் குட்கா விற்ற பிரபாகரன்(30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

The post மது, குட்கா விற்ற 4பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Uthankara ,Tasmak ,Ambedkar Nagar ,Gudka ,Dinakaran ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு