×

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மணப்பாக்கம் குளத்தை புனரமைக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆலந்தூர் மணப்பாக்கத்தில் உள்ள குளத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் கட்டுமானப் பொருட்களை கொட்டி ஆக்கிரமித்தும், நீர்நிலையில் கழிவுநீர் கலந்து மாசுபடுத்தியும் வருகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பறவைகளை பாதுகாக்க கடந்த 2019ம் ஆண்டு குளத்தை சுத்தம் செய்து 30 டன் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தை தூர்வாரி புனரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை புனரமைத்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

The post ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மணப்பாக்கம் குளத்தை புனரமைக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Maniphekam ,Pond ,Igourd ,Chennai ,Ramalingam ,Nandambakkam ,Alandur Manbakam ,Ikord ,Dinakaran ,
× RELATED ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக...