×

திருப்பதி கெங்கையம்மன் கோயிலின் பெருமையை நாடு முழுவதும் அறியும் வகையில் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும்-பாடல்கள் சிடி வெளியீடு விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : திருப்பதி கெங்கையம்மன் கோயிலின் பெருமையை நாடு முழுவதும் அறியும் வகையில் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று பாடல்கள் சிடி வெளியீடு விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசினார். திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் கெங்கை அம்மன் திருவிழா பாடல்கள் சிடி வெளியிட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திருப்பதி எம்எல்ஏ கருணாகரன், மேயர் சிரிஷா, ஆணையாளர் ஹரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது எம்எல்ஏ கருணாகரன் பேசியதாவது: நாட்டிலேயே முதல் கிராம தெய்வம் நமது திருப்பதி கெங்கை அம்மன் கோயில் என்றும், திருப்பதி கெங்கை அம்மன் கோயிலில் இருந்து ஜனபத விழா நாடு முழுவதும் பரவியது. ராயலசீமாவில் நடைபெறும் கெங்கை அம்மன் திருவிழாவின் தலையாயது திருப்பதி என்று விளக்கிய அவர்,கெங்கை அம்மன் கோயிலின் முக்கியத்துவத்தை இந்திய தேசம் அறிய வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருமலை ஸ்ரீவாரி கோயிலில் இருந்து தனது சகோதரி கெங்கம்மாவுக்கு புடவை அணிவிக்கும் வழக்கம் தொடர்கிறது. கெங்கம்மாவை தரிசனம் செய்த பிறகே திருமலை ஸ்ரீவாரியை தரிசிக்கும் வழக்கம் முன்பு இருந்ததை நினைவுபடுத்தினார்.

கடந்த காலங்களில் பஞ்சமிதீர்த்தத்தின் போது திருமலை மற்றும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி அம்மாவாரி பிரமோற்சவத்திற்கு பிரசாதமாக வழங்கப்படும் மஞ்சள் மற்றும் குங்குமம் கெங்கை அம்மன் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. திருப்பதி கெங்கம்மாவின் அருளால் நம் பகுதியில் இயற்கை சீற்றங்கள் இல்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக காலரா நோய் இங்கு வரவில்லை. இவை அனைத்தும் ெகங்கம்மா அருள்தான் காரணம். இங்குள்ள 4.5 லட்சம் மக்கள் கெங்கை அம்மன் திருவிழா பிரமோற்சவம் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. கெங்கையின் பெருமையை நாடு முழுவதும் பரப்ப அனைவரின் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பதி கெங்கையம்மன் கோயிலின் பெருமையை நாடு முழுவதும் அறியும் வகையில் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும்-பாடல்கள் சிடி வெளியீடு விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tirupati Kengaiyamman temple ,Tirupati ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...