×

புத்தகங்கள் மனிதனுக்கு ஆளுமை பண்பை உருவாக்கும் புத்தக திருவிழாவில் கவிஞர் சல்மா பேச்சு

 

அரியலூர்: புத்தகங்கள் மனிதனுக்கு ஆளுமை பண்பை உருவாக்கும் என்று புத்தக திருவிழாவில் கவிஞர் சல்மா கருத்துரை வழங்கினார். அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 7வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை தலைசிறந்த நட்சத்திர பேச்சாளர்கள் கருத்துரைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான “வாழும் வரை வாசிப்போம்” என்ற தலைப்பின் கீழ் அரியலூர் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார்.

இதில் புத்தகங்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், முதுபெரும் புகழ்பெற்ற தலைவர்கள் புத்தக வாசிப்பில் காட்டிய அக்கறை மற்றும் புத்தகங்களை அவர்கள் நேசித்ததும் குறித்தும், தாங்கள் வசித்த காலம் முழுவதும் தலைவர்களின் புத்தகங்கள் வாசிப்பு குறித்தும் பேசினார். அப்போது, இன்றைய இளைஞர்கள் தங்களது அறிவுத் திறனை பெருக்கிக் கொள்ள தவறாமல் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேற்கொள்வதுடன், வாழும் வரை நாம் புத்தகங்களை வாசிப்போம் எனவும் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, “அன்பின் அழகு” என்ற தலைப்பின்கீழ் சொல்வல்லார் கவிஞர் நந்தலாலா கருத்துரை வழங்கினார்.

இதில் அன்பு, கருணை, அறம் குறித்தும், திருவள்ளுவரின் திருக்குறள் மூலம் அன்பின் முக்கியத்துவம் குறித்தும், மனிதர்கள் ஒவ்வொருவரும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் பொழுது எவ்வித சச்சரவுகளும் ஏற்படாது எனவும், எனவே நாம் அனைவரும் அன்புடன் அனைவரிடத்திலும் பழக வேண்டும் எனவும் “அன்பின் அழகு” என்ற தலைப்பின் கீழ் சொல்வல்லார் கவிஞர் நந்தலாலா கருத்துரை வழங்கினார். பின்னர், “புத்தகங்களும் நானும்” என்ற தலைப்பின்கீழ் கவிஞர் சல்மா கருத்துரை வழங்கினார்.

இதில், புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்தும், புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம் குறித்தும், புத்தகங்களின் பயன்கள் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தும், புத்தகங்கள் மனிதர்களுக்கு ஆளுமை பண்பை உருவாக்குதல் குறித்தும், புகழ்பெற்ற தலைவர்கள் வளர்ச்சிகள், புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்தும் புத்தகங்களும் நானும் என்ற தலைப்பின்கீழ் கவிஞர் சல்மா கருத்துரை வழங்கினார்.

The post புத்தகங்கள் மனிதனுக்கு ஆளுமை பண்பை உருவாக்கும் புத்தக திருவிழாவில் கவிஞர் சல்மா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Poet Salma ,Ariyalur ,Ariyalur… ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...