×

பெரம்பலூர் அருகே சின்னாறு ஏறி வரத்து வாய்க்கால் ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணி

 

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள சின்னாறு ஏறி வரத்து வாய்க்கால் ரூ15 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகளை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சின்னாறு ஏரியில் சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கிமீ நீளமுள்ள வரத்து வாய்க்கால் ரூ.15 லட்சம் மதிப்பில் மேற் கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை யில் நேற்று (27ம் தேதி) தொடங்கி வைத்தார்.

சின்னாறு ஏரியானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூ ரில் இருந்து 15 கி.மீ தொ லைவில் அமைந்துள்ளது. கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக் கட்டு மூலம் சின்னாறு ஏரி க்கு தண்ணீர் வருகிறது. சின்னாறு ஏரியானது 195 ஏக்கர் பரப்பளவு கொண் டது. ஏரியின் அதிகபட்ச நீர் மட்டம் 96.620 மீ ஆகும். 72 மில்லியன் கனஅடி நீர் கொ ள்ளளவு திறன் கொண்டது. இதன்மூலம் 716 ஏக்கர் நில ங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்தசில ஆண் டுகளாக தூர் வாரப்படாம லும், முட்புதர்கள் மண்டியும், வரத்துக்கால் முழுவதும் மண் மேடிட்டு தூர்ந்து உள் ளதால் ஏரிக்குத் தண்ணீர் முழுமையாக வர முடியா மல் அருகில் உள்ள பாசன நிலங்களில் நீர் தேங்கி சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனை சரி செய்வதற்காக ரூ15 லட்சம் மதிப்பில் சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4கி.மீ நீளத்திற்கு வர த்து வாய்க்கால் முழுவதை யும் தூர்வாரி ஏரிக்கரை யை பலப்படுத்தி, ஏரிப் பகு தியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கொள் ளளவை அதிகரித்து நீர் கொண்டு செல்வதற்கும், நீர் தேக்கி வைக்கும் அளவி ற்கும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த பணிகள் வருகிற ஜுன் மா தம் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் வேப்பந்தட் டை ஊராட்சி ஒன்றியக்கு ழு தலைவர் ராமலிங்கம், மருதையாறு வடிநில கோ ட்ட உதவி செயற்பொறியா ளர் சரவணன், மாவட்ட ஊ ராட்சிக் கவுன்சிலர் மகா தேவி ஜெயபால், வேப்பந்த ட்டை தாசில்தார் துரைராஜ், திமுக ஒன்றிய செயலாளர் (கி) ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் அருகே சின்னாறு ஏறி வரத்து வாய்க்கால் ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Chinnaru Eri Baratu ,Perambalur ,Chinnaru Erivaratu ,Erivaratu ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...