×

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி துவங்க வேண்டும்

 

கரூர்: கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி துவங்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கீழ்பவானி ஆயக்காட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டம் 2020ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2021ம் ஆண்டு முதல் வேலைகள் தொடங்கப்பட்டது. ஆனால், திடிரென இந்த திட்ட வேலைகள் முடக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகள் ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

சீரமைப்பு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் இந்த பாசன ஆண்டில் மட்டும் (2022&23) நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாத காலம் தண்ணீர் இடைநிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதிகளவு நஷ்டமடைந்துள்ளனர். இந்த சீரமைப்பு பணிகளை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பாசன சபைகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை 2023ம் ஆண்டு மே 1ம்தேதி தொடங்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு ஒப்பந்தக்காரர்கள் போடப்பட்ட வழக்கில் சீரமைப்பு பணிகளை செய்யும் ஒப்பந்தகாரர்களின் ஊழியர்களுக்கும், இயந்திரங்களுக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மே 1ம்தேதி எந்தவித காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2லட்சத்து 7ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் மட்டும் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. எனவே, இந்த கோரிக்கை குறித்து மூன்று மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்துள்ளோம். எனவே, மே 1ம்தேதி முதல் கால்வாய் சீரமைப்பு பணிகள் துவங்க வேண்டும் என மனு கொடுத்து வந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி துவங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kilpawani canal ,Karur ,Kilbhavani Aayakattu ,Kilbhavani ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...